sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 12, 2025 ,ஐப்பசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பொங்கலுக்கு பானையும் அடுப்பும் வாங்கணும்

/

பொங்கலுக்கு பானையும் அடுப்பும் வாங்கணும்

பொங்கலுக்கு பானையும் அடுப்பும் வாங்கணும்

பொங்கலுக்கு பானையும் அடுப்பும் வாங்கணும்


ADDED : நவ 11, 2025 10:57 PM

Google News

ADDED : நவ 11, 2025 10:57 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

த மிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் சங்கத்தினர் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், 'தைத்திருநாளான பொங்கலன்று, தமிழக அரசு ரேஷன் கடைகள் வாயிலாக மக்களுக்கு அரிசி, பருப்பு, கரும்பு உள்ளிட்ட பொங்கல் தொகுப்பு வழங்கப்படுகிறது. இத்துடன் பொங்கலிட வசதியாக புதிய மண்பானை மற்றும் அடுப்பு வழங்க வேண்டும். இதனை மண்பாண்ட தொழிலாளர்களிடம் இருந்து அரசு கொள்முதல் செய்து வழங்க வேண்டுகிறோம்' என கூறியிருந்தனர்.

பள்ளிக்கு இடம் வேண்டும் மறுமலர்ச்சி மக்கள் இயக்க தலைவர் ஈஸ்வரன் கொடுத்த மனுவில், 'க.க. சாவடியில் அரசு உயர்நிலை பள்ளிக்கு 1,875 சதுர மீட்டர் மட்டுமே இட வசதி உள்ளது. இதே வளாகத்திலும் உயர்நிலைப்பள்ளி, தொடக்கப்பள்ளி, அங்கன்வாடி மையம் மற்றும் சத்துணவுக்கூடம் ஆகியவை உள்ளன. இடப்பற்றாக்குறை காரணமாக புதிய கட்டடங்கள் கட்டவும், விளையாட்டு மைதானம், கழிவறை வசதி ஏற்படுத்தவும் இயலாத நிலை உள்ளது. பள்ளியை ஒட்டி 50 சென்ட் இடத்தை பள்ளிக்கு அளிக்க, எட்டிமடை பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இடம் அளந்தும், இதுவரை எந்த முடிவும் எட்டப்படவில்லை. மாணவர் நலன் கருதி விரைவாக நல்ல முடிவு எடுக்க வேண்டும்' என கூறியுள்ளார்.

கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கோவை வடக்கு நெ. 4 வீரபாண்டி பேரூராட்சியில் ரூ.10 கோடியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட உள்ளது. கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணியால் வள்ளலார் நகர், லட்சுமிபுரம், ஸ்ரீ பாலாஜி நகர், கன்னிகா நகர், ஜெய் ஸ்ரீ நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதிக்கப்படுவர். அதனால் கழிவு நீர் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என இப்பகுதி மக்கள் மனு அளித்தனர்.

பைக் டாக்சிக்கு தடை இ.ம.க. ஆட்டோ தொழிற்சங்கத்தினர் அளித்த மனுவில், 'கோவையில் செயல்படும் பைக்டாக்சி காரணமாக ஆட்டோ தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆட்டோ டிரைவர்கள் வருவாயின்றி சிரமப்படுகின்றனர். எனவே பைக் டாக்சியை தடை செய்ய வேண்டும்' என கூறியிருந்தனர்.

மதுக்கடைக்கு 'நோ' நீலிக்கோணாம்பாளையம் பகுதி மக்கள் அளித்த மனுவில், 'எஸ்.ஐ.எச்.எஸ்., காலனியிலுள்ள எண்.1698 அரசு டாஸ்மாக் மதுக்கடைக்கு அருகே, மாற்றுத்திறனாளிகளுக்கான பள்ளி, மனநல காப்பகம், அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளி அமைந்துள்ளன. அதனால் மதுக்கடையை வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும்' என்று வலியுறுத்தியுள்ளனர்.

உதவி வேண்டும் என்.ஜி.ஜி.ஓ.,காலனியை சேர்ந்த தம்பதியர், தங்களது குழந்தைக்கு முதுகெலும்பு தசைநார் சிதைவு நோய் ஏற்பட்டுள்ளதாகவும், அதற்கு மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள 1.5 கோடி ரூபாய் மருத்துவ செலவாகும் என்றும் கூறி, மருத்துவ சான்றுகளுடன் உதவி கேட்டு கலெக்டர் அலுவலகம் வந்தனர்.






      Dinamalar
      Follow us