ADDED : மே 21, 2026 09:13 AM
கோவை: காந்திபுரம் பஸ் ஸ்டேண்டில், கமிஷன் பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் சமையல் தொழிலாளியை கத்தியால் குத்திய இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
கேரள திரிச்சூர் மூனாப், 37, சமையல் வேலைக்கு ஆட்களை அனுப்பும் தொழில் செய்து வந்தார். நேற்று முன்தினம், காந்திபுரத்தில் நடந்த திருமண நிகழ்வில் சமையல் பணிக்காக ராஜேஷ், பிரவீன் ஆகிய இருவரை தன்னுடன் அழைத்து வந்திருந்தார்.
வேலை முடிந்து கேரளம் செல்ல காந்திபுரம் பஸ் ஸ்டேண்டிற்குமூவரும் வந்தனர். அப்போது, கமிஷன் பிரிப்பதில், மூனாப் மற்றும் பிர வீனுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த தகராறில், பிரவீன் காய்கறி வெட்டும் கத்தியால் மூனாபை குத்திவிட்டு தப்பி ஓடினார். அவரது அலறல் சத்தம் கேட்ட பயணிகள் மூனாபை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப் படுகிறது.
இப்புகாரின் பேரில், காட்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, தப்பி ஓடிய பிரவீனை கைது செய்தனர்.
