/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தொழிலாளியை கத்தியால் குத்தியவர் கைது
/
தொழிலாளியை கத்தியால் குத்தியவர் கைது
ADDED : ஜூலை 25, 2025 09:34 PM
மேட்டுப்பாளையம்; கோவை மாவட்டம் காரமடை வடக்கு ரத வீதியை சேர்ந்தவர் ராஜு, இவரது மகன் புவன் பிராங்கிளின், 23. தனியார் நிறுவனத்தில் பணி புரிகிறார். அதே பகுதியில் வசித்து வருபவர் ரஞ்சித், 28; கட்டட தொழிலாளி.
இவர்கள் இருவரும் ஒன்றாக மது அருந்தி உள்ளனர். அப்போது பிராங்கிளினுக்கு தெரிந்த இளம்பெண் குறித்து, ரஞ்சித் தகாத முறையில் பேசியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குவாதம் முற்றிய நிலையில், பிராங்கிளின் தனது இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ரஞ்சித்தை குத்தினார். இதில் ரஞ்சித்துக்கு மார்பு பகுதியில் காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் மீட்டு ரஞ்சித்தை மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ரஞ்சித் அளித்த புகாரின் பேரில், காரமடை போலீசார் வழக்கு பதிவு செய்து, நேற்று புவன் பிராங்கிளீனை கைது செய்தனர்.