/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வாலிபரை கத்தியால் குத்தியவர் கைது
/
வாலிபரை கத்தியால் குத்தியவர் கைது
ADDED : ஜன 20, 2025 06:21 AM
கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு, நல்லட்டிபாளையத்தில் வாலிபரை கத்தியால் குத்திய நபரை, போலீசார் கைது செய்தனர்.
கிணத்துக்கடவு, நல்லட்டிபாளையம் பகுதியைச்சேர்ந்தவர் மணிகண்டன், 30, ஆட்டோ டிரைவர். இவருக்கும் இவரது மனைவி அஞ்சலிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி புகார் அளிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், நல்லட்டிபாளையம் பகுதியில், அஞ்சலி ரோட்டில் நடந்து செல்லும் போது இவரின் பின்னால் மணிகண்டன் வந்து பேசியுள்ளார். இதைக்கண்ட அஞ்சலியின் தம்பி விக்ரம், 22, மணிகண்டனிடம் என் அக்காவிடம் பேசாதே என கூறியுள்ளார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு ஆனது. இதில், மணிகண்டன் தன்னிடமிருந்து கத்தியை எடுத்து, விக்ரமின் காது மற்றும் கழுத்து பகுதியில் தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த விக்ரமை, அருகில் இருந்தவர்கள் மீட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, மணிகண்டனை கைது செய்தனர்.