/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வீட்டின் முன் நிறுத்தப்பட்ட பைக்கை திருடியவர் கைது
/
வீட்டின் முன் நிறுத்தப்பட்ட பைக்கை திருடியவர் கைது
வீட்டின் முன் நிறுத்தப்பட்ட பைக்கை திருடியவர் கைது
வீட்டின் முன் நிறுத்தப்பட்ட பைக்கை திருடியவர் கைது
ADDED : ஏப் 06, 2025 09:56 PM
பொள்ளாச்சி; வீட்டின் முன் நிறுத்தப்பட்ட பைக்கை திருடியவர் கைது செய்யப்பட்டார்.
பொள்ளாச்சியைச் சேர்ந்தவர் தவசி, 24. இவர், தனது பைக்கை, வீட்டின் முன் நிறுத்தி வைத்திருந்தார். அப்போது, அடையாளம் தெரியாத நபர்கள், பைக்கை திருடிச் சென்றுவிட்டார்.
இதையடுத்து, அவர், கிழக்கு போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார், விசாரித்தும் வந்தனர். இந்நிலையில், போலீசார், தன்னாசியப்பன் கோவில் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, சந்தேகமளிக்கும் வகையில் வந்தவரிடம் விசாரணை நடத்தினர். அவர், திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளி சதீஷ்குமார், 42, என்பதும் தெரிந்தது. தொடர் விசாரணையில், சதீஷ்குமார், ஆறு பைக்குகள் திருடி, அதன் உதிரிபாகங்களை, பழைய இரும்பு கடையில் விற்றதும் தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

