ADDED : மார் 19, 2025 08:38 PM
நெகமம்; நெகமம், வட சித்தூர் பகுதியில் பைக் திருட்டில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.
நெகமம், வடசித்தூரை சேர்ந்தவர் சங்கர், 38, இவர் கோவையில் உள்ள நகைக்கடையில் பணியாற்றி வருகிறார். கடந்த, 17ம் தேதி, வீட்டின் முன்பாக நிறுத்தியிருந்த இவரது பைக் திருட்டு போனது. இதுபற்றி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவு காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது, ஒத்தக்கால்மண்டபம் பகுதியை சேர்ந்த சண்முகம், என்பவர் பைக் திருடி சென்றது தெரியவந்தது. இதை தொடர்ந்து, நெகமம் போலீசார் சண்முகத்தை தேடி வந்தனர்.
இந்நிலையில், நேற்று பொள்ளாச்சி, ரங்கசமுத்திரம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, திருட்டு பைக்கை ஓட்டி வந்த சண்முகத்தை கைது செய்து, பைக்கை பறிமுதல் செய்தனர்.