/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தங்கநகை, பணம் திருடிய நபர் கைது
/
தங்கநகை, பணம் திருடிய நபர் கைது
ADDED : மே 01, 2025 05:58 AM

கோவை : கோவை மாநகர், வடவள்ளி காவல் நிலையத்துக்கு உட்பட்ட சுண்டப்பாளையம் எஸ்.எம்.நகர் பகுதியில் வசிக்கும் பழனிச்சாமி என்பவர் கடந்த, 22ம் தேதி, தனது வீட்டு பூட்டை உடைத்து பணம் மற்றும் நகைகளை, யாரோ திருடி விட்டதாக, வடவள்ளி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார்.
வடவள்ளி போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் ரமேஷ் குமார் தலைமையில் திருட்டை கண்டுபிடிக்க, தனிப்படை அமைக்கப்பட்டது. 100-க்கு மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து, கோவை அண்ணாநகர் எல்.ஐ.சி., காலனி, செல்வபுரத்தை சேர்ந்த, சேதுராமன் 32 என்பவரை, போலீசார் கைது செய்தனர். சேதுராமனிடம் இருந்து, 29 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.43 ஆயிரம் பணம் மீட்கப்பட்டது.
சேதுராமன் மீது, கோவை மாநகர் டி2 செல்வபுரம் போலீஸ் ஸ்டேஷனில், ஏற்கனவே இரண்டு வழக்குகளும், சாய்பாபா காலனி போலீஸ் ஸ்டேஷனில் ஒரு வழக்கும், நிலுவையில் இருப்பது தெரிய வந்தது. சேதுராமனை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிமன்ற காவலில் வைத்துள்ளனர்.