ADDED : ஜன 13, 2026 05:13 AM
அ நிறம் | அளவு
கோவை: மேட்டுப்பாளையம் ரயில்வே ஸ்டேஷன் பணிமனை அருகே ரயில்வே பாதுகாப்பு படையினர் (ஆர்.பி.எப்.,) ரோந்து சென்றனர். அப்போது ரூ.1,000 மதிப்புள்ள, 10 எண்ணிக்கையிலான ரயில்வே இரும்பு 'எலாஸ்டிக் கிளிப்'கள் திருடிய, சிறுமுகை அடுத்த பெல்லேபாளையத்தை சேர்ந்த பழனிசாமி(43) என்பவரை கைது செய்தனர்.
அவர் கோவை ஜெ.எம்., 1 கோர்ட்டில்(விடுப்பு கோர்ட்) ஆஜர்ப்படுத்தப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
