/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நகை, மொபைல்போன்கள் திருடிய பலே ஆசாமி கைது
/
நகை, மொபைல்போன்கள் திருடிய பலே ஆசாமி கைது
ADDED : டிச 09, 2024 08:00 AM
நெகமம், : நெகமம் அருகே உள்ள வீட்டில், நகை, மொபைல்போன் உள்ளிட்டவைகளை திருடிய நபரை போலீசார் கைது செய்தனர்.
சிவகாசியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம், 20. இவர், கடந்த சில நாட்களுக்கு முன் பேஸ்புக்கில் பேக்கரி வேலைக்கு ஆட்கள் தேவை என்ற விளம்பரத்தை பார்த்து, தொடர்பு கொண்டு நெகமத்திற்கு வந்தார். நெகமத்தில் உள்ள தனியார் பேக்கரியில் வேலை செய்ய வந்த அவர், பேக்கரியின் டீ மாஸ்டர் செல்வகுமார் அறையில் இரவு தங்கினார். அப்போது அறையில் இருந்த, 1.5 பவுன் தங்க நகை, ஏழாயிரம் ரூபாய் பணம், 2 மொபைல்போன்கள் மற்றும் பைக் என, அனைத்தையும் திருடி சென்றார்.
செல்வகுமார் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, பன்னீர்செல்வதை தேடி வந்தனர். நேற்றுமுன்தினம் நெகமம் பஸ் ஸ்டாண்ட் அருகே அவரை பிடித்து விசாரித்த போது, திருடியத்தை ஒப்புக்கொண்டார். இதையடுத்து, அவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.