/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மரக்கடையில் பணம் திருடியவர் கைது
/
மரக்கடையில் பணம் திருடியவர் கைது
ADDED : நவ 18, 2025 03:33 AM
நெகமம்: நெகமம் பகுதியில் பிரகாஷ், 56, என்பவருக்கு சொந்தமான மரக்கடை உள்ளது. கடையில், 25 ஆயிரம் ரூபாய் பணத்தை வைத்து சென்றார்.
மறு நாள் காலையில், கடையை திறந்து பார்த்த போது பணம் இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பிரகாஷ், நெகமம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார்.
இதன் அடிப்படையில், மரக்கடை மற்றும் சுற்றுப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவு காட்சிகளை போலீசார் ஆய்வுக்கு உட்படுத்தினர். அப்போது, நெகமம் பகுதியில் வசிக்கும் நேபாளத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் பணத்தை திருடுவது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து, அந்த சிறுவனை போலீசார் கைது செய்து கோவையில் உள்ள கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பினர். இந்த சிறுவன் மீது, ஏற்கனவே பல திருட்டு வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

