/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பெட்ரோல் குண்டு வீசுவதாக மிரட்டல் விடுத்தவர் கைது
/
பெட்ரோல் குண்டு வீசுவதாக மிரட்டல் விடுத்தவர் கைது
ADDED : ஏப் 26, 2025 12:45 AM
போத்தனூர் ;கோவை குனியமுத்தூரை சேர்ந்தவர் வெண்ணிலா, 24. இவருக்கும் உக்கடம், அன்பு நகரை சேர்ந்த முஹமது தானிஷ், 25 என்பவருக்கும் ஓராண்டுக்கு முன் பழக்கம் ஏற்பட்டது.
அவருக்கு திருமணமானது தெரிந்ததால், வெண்ணிலா பழகுவதை தவிர்த்தார். இந்நிலையில், அவரை தொடர்பு கொண்ட முஹமது தானிஷ், அவரையும், குடும்பத்தாரையும் பெட்ரோல் குண்டு வீசி கொன்று விடுவதாக, மிரட்டல் விடுத்துள்ளார்.
இச்சூழலில், நேற்று முன்தினம் வெண்ணிலா, தனது கணவருடன் வீட்டின் முன் நின்றிருந்தார்.
அங்கு வந்த முஹமது தானிஷிடம், தனது மனைவிக்கு மிரட்டல் விடுத்தது குறித்து, வெண்ணிலாவின் கணவர் கேட்டுள்ளார்.
அவரை தாக்கி, கீழே தள்ளிய முஹமது தானிஷ், அங்கிருந்து தப்பினார்.
வெண்ணிலா புகாரில், குனியமுத்தூர் போலீசார் விசாரித்து, முஹமது தானிஷை கைது செய்தனர்.

