/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
படுக்கையில் இருந்து தவறி விழுந்தவர் பலி
/
படுக்கையில் இருந்து தவறி விழுந்தவர் பலி
ADDED : ஜூலை 04, 2025 10:27 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; போத்தனுார் மேட்டூர், மாரியம்மன் கோயில் வீதியைச் சேர்ந்தவர் ராஜா அமர்நாத், 45. மதுப்பழக்கத்துக்கு அடிமையான இவர், 2ம் தேதி இரவு வழக்கம்போல் மது குடித்து விட்டு, வீட்டில் தனது அறையில் உள்ள படுக்கையில் உறங்கினார். மதுபோதையில் துாங்கிக் கொண்டிருந்த ராஜா அமர்நாத், கட்டிலில் இருந்து கீழே விழுந்துள்ளார்.
அமர்நாத் கட்டில் கீழே கிடப்பதைப் பார்த்த உறவினர்கள், ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள், அமர்நாத்தை பரிசோதித்தபோது, உயிரிழந்து கிடப்பது தெரியவந்தது. சுந்தராபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.