/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மரத்தில் இருந்து விழுந்தவர் பலி
/
மரத்தில் இருந்து விழுந்தவர் பலி
ADDED : மார் 26, 2025 09:09 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெகமம்; நெகமம் அருகே, தேவம்பாடியை சேர்ந்தவர் முருகேசன், 65, கூலி தொழிலாளி. இவர், பெரியகளந்தையில் உள்ள தென்னந்தோப்பில், இளநீர் பறிக்க தென்னை மரம் ஏறிய போது, பழுத்த மட்டையை பிடித்துள்ளார்.
அப்போது மட்டை கீழே விழுந்ததால், முருகேசனும் மரத்தில் இருந்து விழுந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
பரிசோதித்த டாக்டர்கள், வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.