/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இருசக்கர வாகனத்தில் கீழே விழுந்தவர் பலி
/
இருசக்கர வாகனத்தில் கீழே விழுந்தவர் பலி
ADDED : ஆக 20, 2025 09:26 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, நாய் குறுக்கே பாய்ந்ததால், இருசக்கர வாகனத்தில் சென்றவர் தவறி விழுந்து இறந்தார்.
பொள்ளாச்சி அருகே, ஆர்.கோபாலபுரத்தை சேர்ந்தவர் மணிகண்டன்,38, மருந்து நிறுவன விற்பனை பிரதிநிதி. இவர், நேற்றுமுன்தினம் நள்ளிரவு,12:00 மணிக்கு சொந்த வேலையாக கெடிமேடு வரை சென்று, மீண்டும் இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு வந்தார்.
அப்போது, பாலக்காடு ரோடு கோடங்கிப்பட்டி பிரிவு அருகில், எதிர்பாராதவிதமாக நாய் குறுக்கே பாய்ந்ததால், தடுமாறி கீழே விழுந்து தலையில் படுகாயமடைந்து, சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து, தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.