/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காட்டு யானை விரட்டியதில் காயமடைந்தவர் உயிரிழப்பு
/
காட்டு யானை விரட்டியதில் காயமடைந்தவர் உயிரிழப்பு
ADDED : டிச 17, 2024 09:58 PM

வால்பாறை; வால்பாறை அடுத்துள்ள கெஜமுடி எஸ்டேட் எல்.டி.,டிவிஷன், தொழிலாளர் குடியிருப்பு பகுதிக்கு, கடந்த 10ம் தேதி நள்ளிரவு, 1:00 மணிக்கு, காட்டு யானைகள் வந்தன. சப்தம் கேட்டு சரோஜினி என்பவர் வீட்டின் பின்பக்க கதவை திறந்த போது, வெளியே நின்றிருந்த யானை தாக்கியதில் அவருக்கு கை மற்றும் கால்களில் படுகாயம் ஏற்பட்டது.
காயமடைந்த தொழிலாளியை காப்பாற்ற சென்ற போது, யானை மற்றவர்களை விரட்டியது. இதில், தடுமாறி விழுந்ததில் தொழிலாளர்கள், உதயகுமார், சந்திரன், கார்த்தீஸ்வரி, ஆகியோர் படுகாயமடைந்தனர்.
காயமடைந்த நான்கு தொழிலாளர்களுக்கும் வால்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக பொள்ளாச்சி மற்றும் கோவை அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்நிலையில், கீழே விழுந்து காயமடைந்த சந்திரன், 62, கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலையில் உயிரிழந்தார். இதுகுறித்து மானாம்பள்ளி வனச்சரக அலுவலர் கிரிதரன் தலைமையிலான வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சந்திரன்