/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மது, புகையிலை பொருள் பதுக்கிய இவருக்கு சிறை
/
மது, புகையிலை பொருள் பதுக்கிய இவருக்கு சிறை
ADDED : மே 13, 2025 01:19 AM
கோவை, ; விற்பனை செய்வதற்காக மதுபாட்டில்கள், புகையிலைப் பொருட்களை பதுக்கிய இருவரை போலீசார் சிறையில் அடைத்தனர்.
கோவை நஞ்சுண்டாபுரம் டாஸ்மாக் மதுக்கடை அருகே பெட்டிக்கடையில், மதுபாட்டில்கள், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள், விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக ராமநாதபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் நடத்திய சோதனையில் அது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து மதுபாட்டில்கள், புகையிலைப் பொருட்களை பதுக்கிய தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்த மார்க்செல்வம், 40, சிவகங்கை, இளையான்குடியை சேர்ந்த விஷ்ணு, 24 ஆகிய இருவரையும், சிறையில் அடைத்தனர். தப்பியோடிய, முத்துக்குமார் என்பவரை தேடி வருகின்றனர். அவர்களிடம் இருந்து எட்டு கிலோ அளவிலான 73 பாக்கெட்டுகள் புகையிலைப் பொருட்கள், 93 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

