/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மருதமலை அடிவாரத்தில் கஞ்சா பதுக்கியவருக்கு சிறை
/
மருதமலை அடிவாரத்தில் கஞ்சா பதுக்கியவருக்கு சிறை
ADDED : ஆக 04, 2025 11:24 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; கோவை வடவள்ளி போலீசாருக்கு, மருதமலை அடிவாரத்தில் கஞ்சா விற்பனை நடப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு சென்ற போலீசார், தீவிர சோதனை நடத்தினர்.
இதில், அப்பகுதியில் உள்ள திருமண மண்டபத்தின் அருகில், சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்றிருந்த நபரை பிடித்து சோதனையிட்டனர்.
அவர், கஞ்சா மறைத்து வைத்திருந்தார். விசாரணையில் அவர், வடவள்ளி மருதமலை அடிவாரம் லெப்ரஸி காலனியை சேர்ந்த கோவிந்தன், 56 எனத் தெரிந்தது.
விற்பனைக்காக கஞ்சாவை பதுக்கி வைத்திருப்பது தெரிந்தது. அவரை போலீசார் சிறையில் அடைத்தனர். அவரிடமிருந்து இரண்டு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

