/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போலி செயலியில் டிரேடிங் ரூ. 11.89 லட்சம் இழந்த நபர்
/
போலி செயலியில் டிரேடிங் ரூ. 11.89 லட்சம் இழந்த நபர்
போலி செயலியில் டிரேடிங் ரூ. 11.89 லட்சம் இழந்த நபர்
போலி செயலியில் டிரேடிங் ரூ. 11.89 லட்சம் இழந்த நபர்
ADDED : பிப் 01, 2025 01:59 AM
கோவை; போலி செயலியில் டிரேடிங் செய்த நபர், ரூ. 11.89 லட்சத்தை இழந்தார்.
கோவை, நவ இந்தியா கிரிம்சன் டான் அபார்ட்மென்டை சேர்ந்தவர் மெகுல் மேத்தா, 43. குமீத் சிங் என்ற நபர், மேகுலின் மொபைல் எண்ணை, 'வி.ஐ.பி., 1 ஸ்டாக் மார்க்கெட் எக்ஸ்சேஞ்ச் ஸ்ட்ரேட்டஜி' என்ற வாட்ஸ் அப் குழுவில் சேர்த்துள்ளார். அக்குழுவில் இருந்த நபர்கள், 'ஆகாடியன் புரோ' என்ற செயலியை பயன்படுத்தி, தாங்கள் அதிக லாபம் சம்பாதித்ததாக தெரிவித்தனர்.
மெகுல் அந்த செயலியை பதிவிறக்கம் செய்து, டிரேடிங் செய்தார். ஒன்பது தவணைகளில் ரூ. 11.89 லட்சம் முதலீடு செய்தார். இதனால், அவரின் கணக்கில் ரூ. 15 லட்சம் இருப்பது போல் காண்பித்துள்ளது. அந்த பணத்தை எடுக்க முயன்றார். அப்போது, மேலும் வரி செலுத்தினால் மட்டுமே, பணத்தை எடுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது தான் மேகுல் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார்.
சம்பவம் குறித்து, மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.