/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பணம் கேட்டு மிரட்டியவருக்கு சிறை
/
பணம் கேட்டு மிரட்டியவருக்கு சிறை
ADDED : பிப் 07, 2025 07:03 AM
கோவை; நாமக்கல், பரமத்தி வேலுாரை சேர்ந்தவர் ஜவஹர், 25. பெங்களூரு ஒயிட்பீல்ட்ஸ் பகுதியில் தங்கி பணிபுரிந்து வருகிறார். இவருடன், பெங்களூருவில் தங்கி பணிபுரிந்து வரும் கோவையை சேர்ந்த இளம்பெண் நட்புடன் பழகி வந்தார். இருவரும் பல்வேறு பகுதிகளுக்கு சென்ற போது, ஒன்றாக புகைப்படம் எடுத்துக் கொண்டனர். ஜவஹருக்கு வேறு பெண்களுடன் தொடர்பு இருப்பது தெரிந்ததால், அவருடன் பழகுவதை தவிர்த்தார்.
ஆத்திரமடைந்த ஜவஹர், பெண்ணுடன் எடுத்த புகைப்படங்கள், வீடியோக்களை, பெண்ணின் தாயாருக்கு அனுப்பி, இளம்பெண் குறித்து தவறாக பேசினார். இளம்பெண் கேள்வி எழுப்பியதால், அவரை திட்டி ரூ.2 லட்சம் கேட்டு மிரட்டியுள்ளார். புகாரின் பேரில், கோவை மாநகர சைபர் கிரைம் போலீசாரிடம் வழக்குப்பதிந்து ஜவஹரை, சிறையில் அடைத்தனர்.

