/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
லேப்டாப் திருடிய நபருக்கு சிறை
/
லேப்டாப் திருடிய நபருக்கு சிறை
ADDED : ஆக 04, 2025 11:27 PM
கோவை; சென்னையை சேர்ந்தவர் விஜய் நாகராஜ், 41. சுற்றுலாதலங்களை சுற்றிப்பார்ப்பதற்காக கடந்த சில தினங்களுக்கு முன், கோவை வந்தார். நேற்று மாலை சென்னை சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில், சென்னை செல்ல முன்பதிவு செய்திருந்தார்.
நேற்று மாலை ரயிலில் ஏறிய அவர், பொருட்கள் வைக்கும் ரேக்கில் தனது கைப்பையை வைத்து விட்டு உணவருந்திக் கொண்டிருந்தார். அப்போது மர்மநபர் ஒருவர், அவரது லேப்டாப் இருந்த கைப்பையை திருடிச் சென்றார். இது குறித்து ஆன்லைன் வாயிலாக, விஜய் நாகராஜ் புகார் தெரிவித்தார்.
வழக்கு பதிந்த கோவை ரயில்வே போலீசார், ரயில்வே ஸ்டேஷனில் சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்றிருந்த நபரை பிடித்து விசாரித்தனர். அவர் கேரள மாநிலம் கோழிக்கோடு வெள்ளாயில் பகுதியை சேர்ந்த சையது அகமது முபின், 43 என்பதும், லேப்டாப்பை திருடியதும் தெரிந்தது.
அவரை பிடித்த போலீசார் சிறையில் அடைத்தனர். லேப்டாப் மீட்கப்பட்டது.