/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புகாரை வாபஸ் பெறுமாறு மிரட்டல் விடுத்தவருக்கு சிறை
/
புகாரை வாபஸ் பெறுமாறு மிரட்டல் விடுத்தவருக்கு சிறை
புகாரை வாபஸ் பெறுமாறு மிரட்டல் விடுத்தவருக்கு சிறை
புகாரை வாபஸ் பெறுமாறு மிரட்டல் விடுத்தவருக்கு சிறை
ADDED : ஜூலை 30, 2025 09:16 PM
கோவை; மேட்டுப்பாளையம் ரோடு, சாய்பாபா காலனியைச் சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மனைவி சத்தியபாமா, 40. இவர்களது வீட்டில் கடந்த 25ம் தேதி விருந்து நிகழ்ச்சி நடந்தது.
இதில், சத்தியபாமாவின் சகோதரி மற்றும் உறவினர்கள் பங்கேற்றனர். அப்போது சத்தியபாமாவின் உறவினர், 22 வயது மகள் திடீரென மாயமானார். இதுகுறித்து சத்தியபாமா சாய்பாபா காலனி போலீசாரிடம் புகார் அளித்தார்.
போலீசார், இளம்பெண் மாயம் என, வழக்கு பதிந்து அவரை தேடி வந்தனர். இளம் பெண்ணின் மொபைலில் இருந்து யாருடன் பேசியுள்ளார் என, விசாரித்தனர். விசாரணையில், இளம்பெண்ணை குறிச்சி ஆத்துப்பாலத்தை சேர்ந்த ரபிக், 22 என்பவர் அழைத்துச் சென்றது தெரிந்தது. கேரளாவில் இருந்து அவர்களை தொடர்பு கொண்ட போலீசார், விசாரணைக்கு ஆஜராகுமாறு அறிவுறுத்தினர்.
ரபீக் மற்றும் இளம் பெண் நேற்று சத்தியபாமா வீட்டுக்கு வந்தனர். ரபீக் வீட்டின் முன் இளம் பெண்ணை இறக்கி விட்டு செல்ல முயன்றார்.
சத்தியபாமா இதுகுறித்து கேட்ட போது, அவரை தகாத வார்த்தைகளால் திட்டிய ரபீக், கொலை மிரட்டல் விடுத்தார். தொடர்ந்து, சத்தியபாமாவின் ஆடையை பிடித்து இழுத்த ரபீக், போலீசாரிடம் கொடுத்த புகாரை வாபஸ் பெறுமாறு, மிரட்டல் விடுத்துள்ளார்.
சத்தியபாமா மீண்டும் சாய்பாபா காலனி போலீசாரிடம் புகார் செய்தார். ரபீக் மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிந்து, சிறையில் அடைத்தனர்.