/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
திருட்டு வழக்கில் தேடப்பட்டவர் ஜீப் கண்ணாடி உடைத்து தகராறு
/
திருட்டு வழக்கில் தேடப்பட்டவர் ஜீப் கண்ணாடி உடைத்து தகராறு
திருட்டு வழக்கில் தேடப்பட்டவர் ஜீப் கண்ணாடி உடைத்து தகராறு
திருட்டு வழக்கில் தேடப்பட்டவர் ஜீப் கண்ணாடி உடைத்து தகராறு
ADDED : அக் 16, 2024 12:15 AM
கோவை : திருட்டு வழக்கில் தேடப்பட்ட நபர், கோர்ட் வளாகத்தில் போலீஸ் ஜீப் கண்ணாடியை உடைத்து தகராறில் ஈடுபட்டார்.
கோவை, சிங்காநல்லுார் பகுதியை சேர்ந்த சக்திகாந்தி,32 என்பவர் மீது, ஜே.எம்:3, கோர்ட்டில் திருட்டு வழக்கு ஒன்றில் விசாரணை நடந்து வருகிறது.
வாய்தாவின் போது தொடர்ந்து கோர்ட்டில் ஆஜராகாத காரணத்தால், அவருக்கு 'பிடிவாரன்ட்' பிறப்பிக்கப்பட்டது.
போலீசார் தேடி வந்த நிலையில், நேற்று கோர்ட் வளாகத்திற்கு வந்திருந்தார்.
அங்கிருந்த சிங்காநல்லுார் போலீசார், விசாரணைக்காக சக்திகாந்தியை பிடித்து போலீஸ் ஜீப்பில் ஏற்றி உட்கார வைத்தனர்.
அப்போது, கூச்சலிட்டபடி இருந்த சக்திகாந்தி, திடீரென போலீஸ் ஜீப் கண்ணாடியை கையால் உடைத்தார். போலீசிடம் தகராறு செய்தார்.
புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரிக்கின்றனர்.