ADDED : பிப் 12, 2026 05:04 AM
அ நிறம் | அளவு
கோவை: ரத்னபுரி ஜி.பி.எம். நகரை சேர்ந்தவர் ராஜாராம், 53; சரவணம்பட்டியில், நகை அடகு கடை வைத்திருந்தார். ஊத்தங்கரை சம்பல்பட்டியை சேர்ந்த சுதா, 39 என்பவர் போலி நகைகளை அடகு வைத்து ராஜாராமிடம் ரூ.1.37 லட்சம் கடன் பெற்றார்.
மீண்டும் ஒரு போலி தங்க மோதிரத்தை அடகு வைக்க சென்ற போது, ராஜாராம் கண்டுபிடித்தார். அவரும் கடை ஊழியர் நல்லாம்பாளையம் மகேந்திரன், 33, விளாங்குறிச்சி, யஷ்வந்த், 19, சின்னவேடம்பட்டி, குழந்தைவேலு, 30, கணபதி, சுகந்தராம், 25 இடிகரையை சேர்ந்த ரித்திக், 20 ஆகியோரும் அப்பெண்ணை அடித்தனர்.
படுகாயம் அடைந்த சுதா உயிரிழந்தார். சரவணம்பட்டி போலீசார் 5 பேரை கைது செய்தனர். தலைமறைவாக இருந்த ரித்திக்கை தேடி வந்தனர். செவ்வாயன்று ரித்திக் சிக்கினார். அவரையும் சிறையில் அடைத்தனர்.
