/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கட்டடத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்றவர் மீட்பு
/
கட்டடத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்றவர் மீட்பு
ADDED : ஏப் 02, 2025 06:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சூலுார்; வெள்ளானைப்பட்டியை சேர்ந்த 15 வயது சிறுவன், நீலம்பூர் அருகே அவிநாசி ரோட்டில் உள்ள உயரமான கட்டடத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு ஏறி தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.
இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர், சூலூர் போலீஸ் மற்றும் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்தனர். அங்கு சென்ற தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி வீரர்கள், அந்த சிறுவனை பாதுகாப்பாக மீட்டு, போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
பெற்றோர் வந்து சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

