/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஊராட்சி ஒன்றிய பள்ளியில் மேலாண்மை குழு கூட்டம்
/
ஊராட்சி ஒன்றிய பள்ளியில் மேலாண்மை குழு கூட்டம்
ADDED : ஜன 08, 2024 01:13 AM
பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் நடந்தது.
பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் மனோரஞ்சிதம் தலைமை வகித்தார். ஆசிரியர் தேவி வரவேற்றார். பள்ளி தலைமையாசிரியர் கணேசன், கூட்டத்தில் கலந்தாலோசனை செய்து நிறைவேற்ற வேண்டிய தீர்மானங்களை முன்மொழிந்து பேசினார்.
பள்ளி மாணவர்களின் பயன்பாட்டுக்கு கூடுதலாக, மூன்று வகுப்பறைகள் தேவை, பள்ளி செல்லாத மாணவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பள்ளி உள்ள கிராமத்தில் இருக்கிறார்களா என்பதைக் கண்டறிதல் வேண்டும். இன்று முதல் வரும், 10ம் தேதி வரை பள்ளியில் தூய்மைப்பணியினை மேற்கொள்தல் வேண்டும்.
இந்த நிகழ்வில், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்களையும், பெற்றோர்களையும் பங்கெடுக்க வைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆசிரியர் மகாலட்சுமி நன்றி கூறினார்.