/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கல்லுாரிகள் இடையே மேலாண்மை போட்டி
/
கல்லுாரிகள் இடையே மேலாண்மை போட்டி
ADDED : ஏப் 02, 2025 07:48 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி, சக்தி தகவல் தொடர்பியல் மேலாண்மை (சிம்ஸ்) கல்லுாரியில், 'ஜெனோ 2025' என்ற தலைப்பில், கல்லுாரிகள் இடையிலான மேலாண்மை போட்டி நடத்தப்பட்டது. முன்னதாக, கல்லுாரி இயக்குனர்(பொறுப்பு) சர்மிளா வரவேற்றார்.
தொடர்ந்து, பெஸ்ட் மேனேஜர், பெஸ்ட் மேனேஜ்மென்ட் டீம், மேலாண்மை வினாடி - வினா, நடனம், தனி நபர் பாடல், மெகந்தி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.
இதில், பல்வேறு பகுதிகளில் உள்ள கலை அறிவியல், பொறியியல் கல்லுாரிகளைச் சேர்ந்த இளநிலை, முதுநிலை மாணவர்கள் கலந்து கொண்டனர்.
முடிவில், ஒவ்வொரு போட்டியிலும் வென்றவர்களுக்கு ரொக்க பரிசு, விருது மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
இதில், என்.ஜி.எம்., கல்லுாரி முதல்வர் மாணிக்கச்செழியன், பேராசியர்கள் சரவணபாபு, முத்துக்குமாரன், உமாபதி, கல்லுாரி மேலாளர் ரகுநாதன், துறை தலைவர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை சிம்ஸ் கல்லுாரி பேராசிரியர்கள் சிவஞான செல்வக்குமார், பிரியதர்சினி உள்ளிட்ட பலர் செய்திருந்தனர்.