/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கடையில் ரூ.5.67 லட்சம் திருடிய மேலாளர் கைது
/
கடையில் ரூ.5.67 லட்சம் திருடிய மேலாளர் கைது
ADDED : பிப் 12, 2024 11:05 PM

சூலுார்:வேலை செய்த கடையில், ரூ. 5.67 லட்சம் பணத்தை திருடிய மேலாளரை போலீசார் கைது செய்தனர்.
சூலுார் அடுத்த கண்ணம்பாளையம் மனோஜ் நகரை சேர்ந்தவர் பிரதீப் ராஜா சவுகான், 47. பாப்பம்பட்டி பிரிவில் மார்பிள் கடை வைத்துள்ளார். பள்ளபாளையம் பாலாஜி நகரை சேர்ந்த மாதவ் லால், 33 என்பவர் கடையில் மேலாளராக வேலை செய்து வந்தார். கடந்த, ஜன., 14ம் தேதி சொந்த ஊருக்கு சென்ற பிரதீப் ராஜா, 19ம் தேதி திரும்பி வந்துள்ளார்.
வரவு செலவு கணக்கை பார்த்தபோது, 5 லட்சத்து, 67 ஆயிரத்து, 200 ரூபாய் குறைவாக இருந்துள்ளது தெரிந்து அதிர்ச்சி அடைந்தார். மேலாளர் மாதவ் லால் மீது சந்தேகம் ஏற்பட்டது. மாதவ் லால் தலைமறைவானார். புகாரையடுத்து, சூலுார் போலீசார். வழக்குப்பதிவு செயது, மாதவ் லாலை நேற்று கைது செய்து, 3 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.