/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மண்டல மஹோற்சவ படிபூஜை திரளான பக்தர்கள் பங்கேற்பு
/
மண்டல மஹோற்சவ படிபூஜை திரளான பக்தர்கள் பங்கேற்பு
மண்டல மஹோற்சவ படிபூஜை திரளான பக்தர்கள் பங்கேற்பு
மண்டல மஹோற்சவ படிபூஜை திரளான பக்தர்கள் பங்கேற்பு
ADDED : டிச 24, 2025 05:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: மதுக்கரையில் உள்ள ஸ்ரீ லட்சுமி நாராயணாஆலயத்தில் நடந்த படிபூஜையில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
மதுக்கரை ஏ.சி.சி. காலனியில் உள்ள, ஸ்ரீ லட்சுமி நாராயணாஆலயத்தில், கடந்த 17ம் தேதி துவங்கிய மண்டல மஹோற்சவம், ஜன. 14ம் தேதி வரை நடக்கிறது.
ஒவ்வொரு நாளும் காலை முதல் அலங்கார பூஜை, தீபாராதனை, நட்சத்திர பூஜை, பஜனை, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.அய்யப்பன் சுவாமிக்கான படிபூஜை நடந்தது. சபரிமலைக்கு மாலை அணிந்தவர்கள் பஜனை நடத்தினர்.
மதுக்கரை, மரப்பாலம், மதுக்கரை மார்க்கெட் சுற்றுவட்டாரங்களை சேர்ந்த பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.