/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாசாணியம்மன் கோவிலில் மண்டல பூஜை நிறைவு
/
மாசாணியம்மன் கோவிலில் மண்டல பூஜை நிறைவு
ADDED : ஜன 28, 2025 06:57 AM

ஆனைமலை :   ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், 14 ஆண்டுகளுக்குப் பின், கடந்த 2024, டிச., 12ல், கும்பாபிேஷகம் நடந்தது. அதன் தொடர்ச்சியாக, கோயிலில், 48 நாட்கள் தொடர்ந்து மண்டல பூஜை நடத்தப்பட்டது. இதன் நிறைவு விழா, நேற்று நடந்தது.
அறங்காவலர் குழுத் தலைவர் முரளி கிருஷ்ணன் தலைமை வகித்தார். மாசாணியம்மனுக்கு, யஜமான சங்கல்பம், விக்னேஸ்வரா பூஜை, புண்யாஹவாசனம், 108 கலச பூஜைகள், த்ரவ்யாஹுதி, பூர்ணாஹுதி, தீபாராதனை உடன் கலசங்கள் புறப்பாடு, த்ரவ்யாபிேஷகம், 108 கலாசாபிேஷகம், மகா தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
மண்டல பூஜை நிறைவு விழாவில், திருப்பரங்குன்றம் சிவாச்சாரியார் ராஜாபட்டர் ஸர்வஸாதகம் செய்தார். மாசாணியம்மன் கோவில் உதவி கமிஷனர் கைலாசமூர்த்தி, அறங்காவலர்கள் பக்தர்கள், திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

