/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கரட்டுமேடு கோவிலில் மண்டல பூஜை நிறைவு
/
கரட்டுமேடு கோவிலில் மண்டல பூஜை நிறைவு
ADDED : ஏப் 28, 2025 03:56 AM

கோவில்பாளையம்: பழமையான கரட்டுமேடு குமரக் கடவுள் கோவில் மண்டல பூஜை நிறைவு விழா நடந்தது.
கோவில்பாளையத்தை அடுத்த கரட்டு மேட்டில், குன்றின் மீது ரத்தினகிரி குமரக் கடவுள் கோவில் உள்ளது. பழமையான இக்கோவிலில் கடந்த மார்ச் 9ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது.
மண்டல பூஜை நிறைவு விழா நேற்று முன்தினம் நடந்தது. காலை 6:30 மணிக்கு, பிள்ளையார் வழிபாடு, வேள்வி வழிபாடு, திருவிளக்கு வழிபாடு நடந்தது. காலை 8:00 மணிக்கு, ரத்தின விநாயகர், திரிசூல பெருமான் உள்ளிட்ட தெய்வங்களுக்கு திருக்குட நீராட்டு நடந்தது. சிரவை ஆதினம் குமரகுருபர சாமிகள் தலைமை வகித்து நடத்தினார்.
குமரக் கடவுளுக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம், நடந்தது. காலை 10:40 மணிக்கு, விநாயகர், உற்சவர் மற்றும் முருகப்பெருமானுக்கு திருக்குட நீராட்டு நடந்தது. பேரொளி வழிபாடும் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.
சரவணம்பட்டி, கோவில்பாளையம் பகுதியைச் சேர்ந்த பல ஆயிரம் பக்தர்கள் பங்கேற்றனர். மண்டல பூஜை நிறைவு விழாவில், குமரக் கடவுள் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார்.

