ADDED : டிச 16, 2025 05:16 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அன்னூர்: சொக்கம்பாளையம் குப்பு செட்டி தோட்டத்தில், நூறு ஆண்டுகள் பழமையான திருவேங்கடநாத பெருமாள் கோயில் உள்ளது.
இக்கோயிலில் பல லட்சம் ரூபாய் செலவில், திருப்பணிகள் செய்யப்பட்டு கடந்த, 1ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. கடந்த, 2ம் தேதி முதல் மண்டல பூஜை தினமும் காலை நடைபெற்று வந்தது. மண்டல பூஜை நிறைவு விழா, நேற்று முன்தினம் நடந்தது. காலையில் திருவேங்கடநாத பெருமாளுக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. அலங்கார பூஜை நடந்தது. பெருமாள், ஸ்ரீதேவி பூதேவி சமேதராக அருள்பாலித்தார். அன்னதானம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

