/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை விழா
/
ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை விழா
ADDED : டிச 12, 2024 11:21 PM
பொள்ளாச்சி; பொள்ளாச்சி, குள்ளக்காபாளையம் தர்மசாஸ்தா ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை விழா நடக்கிறது. நேற்று துவங்கிய லட்சார்ச்சனை, வரும், 21ம் தேதி வரை, காலை, 8:00 மணி முதல் 11:30 மணி வரை நடக்கிறது.
வரும், 24ம் தேதி காலை, 5:00 மணி முதல் தொடர்ந்து, 24 மணி நேரம் அகண்டநாம பஜனை நடக்கிறது. 25ம் தேதி காலை, 6:00 மணிக்கு பால்குட தீர்த்த அபிஷேகம், மாலை, 6:00 மணிக்கு, 108 திருவிளக்கு பூஜை நடக்கிறது.மண்டல பூஜை விழாவான, 26ம் தேதி காலை, 5:00 மணிக்கு நடைதிறப்பு, நிர்மால்ய தரிசனம், உதயாஸ்த்மன பூஜை, 5:30 மணிக்கு கணபதி ஹோமம், மகா அஷ்டாபிஷேகம் நடக்கிறது.
அன்று, மாலை, 4:00 மணிக்கு கன்னிச்சாமிகள் கலசம் கொண்டு வருதல், திருவாபரணப் பெட்டி ஊர்வலம், சிறப்பு அலங்கார பூஜை, அன்னதானம், பஜனை, ஹரிவராசனம் நடக்கிறது. மாலை, 6:00 மணிக்கு தர்மசாஸ்தாவுக்கு சிறப்பு திருவாபரண அலங்கார பூஜை மற்றும் மஹா தீபாராதனையும், இரவு, அன்னதானம், பஜனை மற்றும் படி பூஜை, தீபாராதனை, ஹரிவராசனம், நடைசாத்துதல் நிகழ்ச்சி நடக்கிறது.