/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஐயப்ப சுவாமி கோவிலில் வரும் 26ல் மண்டல பூஜை
/
ஐயப்ப சுவாமி கோவிலில் வரும் 26ல் மண்டல பூஜை
ADDED : டிச 23, 2024 10:00 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி ஐயப்பன் கோவிலில், 48வது ஆண்டு மண்டல பூஜை, அன்னதான விழா வரும், 26ம் தேதி நடக்கிறது.
பொள்ளாச்சி வெங்கடேசா காலனி ஐயப்ப சுவாமி, மஞ்சள் அம்மன் கோவிலில், ஆண்டுதோறும் மண்டல பூஜை விமரிசையாக கொண்டாடப்படுகிறது.நடப்பாண்டு, 48வது ஆண்டு மண்டல பூஜை, அன்னதான விழா வரும், 26ம் தேதி நடக்கிறது.
ஐயப்ப சுவாமி மண்டல பூஜை விழா, அன்னதானத்துக்கு, பக்தர்கள் தானமாக அரிசி, காய்கறிகள் உள்ளிட்டவை வழங்குகின்றனர்.
விழாவையொட்டி, அதிகாலை, 4:00 மணிக்கு திருமதுர பூஜை, 4:15 மணிக்கு மஹா கணபதி ேஹாமம், 5:00 மணிக்கு ஐயப்ப சுவாமிக்கு அபிேஷக பூஜைகள் நடக்கின்றன.
காலை, 6:00 மணிக்கு மஞ்சள் அம்மனுக்கு பூஜை, 6:30 மணிக்கு ஐயப்ப சுவாமிக்கு தீபாராதனை, காலை, 10:30 மணிக்கு மண்டல பூஜை, மஞ்சள் அம்மனுக்கு தீபாராதனையும் நடைபெறுகிறது.
காலை, 11:15 மணிக்கு ஐயப்ப சுவாமிக்கு தீபாராதனை, 11:30 மணிக்கு மகேஸ்வர பூஜை, மதியம், 12:00 மணிக்கு அன்னதானம் நடைபெறுகிறது. மாலை, 6:00 மணிக்கு மண்டல பூஜை தீபாராதனையும், மாலை, 6:30 மணிக்கு பஞ்ச வாத்தியத்துடன் புஷ்ப அலங்காரத்தில் ஐயப்ப சுவாமி திருவீதி உலா நிகழ்ச்சி நடக்கிறது.
கோவை ரோடு, உடுமலை ரோடு, தேர்நிலையம், மார்க்கெட் ரோடு, ராஜாமில் ரோடு, பஸ் ஸ்டாண்ட், வெங்கடேசா காலனி வழியாக வந்து, கோவிலில் திருவீதி உலா நிறைவடைகிறது.