/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கட்டாய 'டி.சி., ' ; கலெக்டரிடம் புகார்
/
கட்டாய 'டி.சி., ' ; கலெக்டரிடம் புகார்
ADDED : ஜூலை 21, 2025 10:46 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மனுவில், 'இந்திய ஜனநாயக வாலிபர் சங்க கோவை மாவட்ட குழு நிர்வாகிகள் விக்னேஷ், நிஷார்அகமது, விவின் அளித்த மனுவில், 'கோவை மாவட்டத்தில் உள்ள, அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற வேண்டும் என்ற நோக்கில், கற்றல் குறைபாடு உள்ள மாணவர்களை, கட்டாயமாக மாற்று சான்றிதழ் கொடுத்து வெளியேற்றி வருகின்றனர்.
இது போன்ற பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று வலியுறுத்தியுள்ளனர்.

