/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உலக மக்கள் நலனுக்காக மங்கள சதசண்டி யாகம்
/
உலக மக்கள் நலனுக்காக மங்கள சதசண்டி யாகம்
ADDED : ஜன 22, 2025 08:11 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி; பொள்ளாச்சியில், உலக மக்கள் நலனுக்காக மங்கள மஹா சதசண்டி யாகம் நடைபெற்று வருகிறது.
பொள்ளாச்சி அருகே, மாக்கினாம்பட்டி ம ேஹஸ்வரியம்மன் கோவிலில், உலக மக்கள் நலனுக்காக மங்கள மஹா சதசண்டியாகம், மஹா ருத்ர யாகம், மஹா நாராயண (லட்சுமி நாராயண) யாகம், கடந்த, 20ம் தேதி முதல் நடக்கிறது. தொடர்ந்து சிறப்பு ஹோமங்கள், சிறப்பு பூஜைகள் நடக்கிறது.
வரும், 26ம் தேதி காலை, 9:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புண்ணியாகவாசனம், விஷ்ணு ஸூக்த ேஹாமம், மஹா சண்டி மஹாயாக பிரகனம், மஹாசண்டி சப்தசதி அத்யாய ேஹாமம், மஹா பூர்ணாஹுதி, வேதிகார்ச்சனை, மஹா தீபாராதனை, கலச தீர்த்த வினியோகம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.