ADDED : மார் 21, 2024 07:02 AM
அ நிறம் | அளவு
கோவை : ரயில் பயணிகள் வசதிக்காக மங்களூருவில் இருந்து ஹஸ்ரத் நிஜாமுதீனுக்கு கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக, ஒரு வழி சிறப்பு ரயில் இயக்கப்படும்.
மங்களூர் சென்ட்ரல் -- ஹஸ்ரத் நிஜாமுதீன் சிறப்பு ரயில் (06090) மங்களூருவில் இருந்து 22ம் தேதி வெள்ளி மதியம் 2:50 மணிக்கு புறப்பட்டு, 24ம் தேதி 7:15 மணிக்கு ஹஸ்ரத் நிஜாமுதீனை சென்றடையும்.
மங்களூர் சென்ட்ரல் ஹஸ்ரத் நிஜாமுதீன் சிறப்பு ரயில் (06090) 22ம் தேதி இரவு, -11:05 மணிக்கு கோவை,- 11:55 மணிக்கு திருப்பூர், 23ம் தேதி இரவு 12:50 மணிக்கு ஈரோடு, நள்ளிரவு 1:47 மணிக்கு சேலம் சென்றடையும்.
