/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'மஞ்சப்பை மெஷின் இயங்காது': இப்பவாவது அறிவிச்சாங்களே!
/
'மஞ்சப்பை மெஷின் இயங்காது': இப்பவாவது அறிவிச்சாங்களே!
'மஞ்சப்பை மெஷின் இயங்காது': இப்பவாவது அறிவிச்சாங்களே!
'மஞ்சப்பை மெஷின் இயங்காது': இப்பவாவது அறிவிச்சாங்களே!
ADDED : அக் 23, 2024 11:19 PM

கோவை,: தினமலர் செய்தி எதிரொலியால், மஞ்சப்பை வெண்டிங் மெஷின் இயங்காது என, அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.
கோவை, காந்திபுரம் வெளியூர் பஸ் ஸ்டாண்ட், தனியார் ஓட்டல் அருகில், சுற்றுச்சூழல், காலநிலை மற்றும் வனத்துறை சார்பில், 'பிளாஸ்டிக் கேரி பேக்' பயன்பாட்டை தடுக்க, மஞ்சப்பை வெண்டிங் மெஷின் வைக்கப்பட்டுள்ளது.
இந்த வெண்டிங் மெஷின் பல மாதங்களாக இயங்கவில்லை. மெஷின் இயங்காதது குறித்து, எந்த அறிவிப்பும் இல்லை. இதனால் பொதுமக்கள், பத்து ரூபாய் நாணயம் செலுத்தி, மஞ்சப்பை கிடைக்காமல், ஏமாற்றம் அடைந்தனர்.
இது குறித்து, நமது நாளிதழில் மெஷினை சரிசெய்ய வேண்டும் அல்லது மெஷின் இயங்காது என, அறிவிக்க வேண்டும் என, நேற்று செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து, 'மெஷின் இயங்காது' என, அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.