/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆள் இறங்கும் குழி சேதம்; வாகன ஓட்டுநர்கள் அவதி
/
ஆள் இறங்கும் குழி சேதம்; வாகன ஓட்டுநர்கள் அவதி
ADDED : செப் 25, 2024 08:38 PM

பொள்ளாச்சி : பொள்ளாச்சி நகராட்சியில், பாதாள சாக்கடை திட்ட ஆள் இறங்கும் குழி சேதமடைந்துள்ளதால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
பொள்ளாச்சி நகரில், பாதாள சாக்கடை திட்டம் துவங்கிய நாள் முதல், இதுவரை பல்வேறு பிரச்னைகளை பொதுமக்கள் சந்தித்து வருகின்றனர்.தற்போது, இத்திட்டத்தில் வீடுகளுக்கு இணைப்பு வழங்கப்படுகிறது.
இந்நிலையில், இத்திட்ட ஆள் இறங்கும் குழிகள் சேதம் மற்றும் கழிவுநீர் வெளியேறும் பிரச்னைகளால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அதில், மகாலிங்கபுரத்தில் பாதாள சாக்கடை திட்ட ஆள் இறங்கு குழி சேதமடைந்து விபத்துகளை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.
பொதுமக்கள் கூறியதாவது:
பொள்ளாச்சி பகுதியில் உள்ள, ஆள் இறங்கும் குழிகளில் இருந்து கழிவுநீர் அவ்வப்போது வெளியேறுவதால் சிரமம் ஏற்படுகிறது.பல இடங்களில் குழி உடைந்தும், உள் இறங்கியும் காணப்படுவதால் கவனமின்றி வருவோர் விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது.
இதுபோன்ற சம்பவங்கள் தொடர்கதையானாலும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. இது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து, சேதமடைந்த குழிகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.