/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பசூரில் நாளை மனு நீதி நாள் முகாம்
/
பசூரில் நாளை மனு நீதி நாள் முகாம்
ADDED : பிப் 12, 2024 11:00 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அன்னுார்:பசூரில், கலெக்டர் பங்கேற்கும் மனுநீதி நாள் முகாம் நாளை (14ம் தேதி) நடக்கிறது.
பசூரில் உள்ள எஸ்.ஆர்.மஹாலில், நாளை (14ம் தேதி) காலை 10:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மனுநீதி நாள் முகாம் நடக்கிறது. இந்த முகாமில் கோவை கலெக்டர் கிராந்தி குமார் பொதுமக்களிடம் மனுக்கள் பெறுகிறார். ஏற்கனவே பெறப்பட்ட மனுக்களுக்கு உரிய உத்தரவுகள் வழங்குகிறார். நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, வேளாண் துறை, தோட்டக்கலை துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் பங்கேற்கின்றனர். பொதுமக்கள் முகாமில் மனு அளித்து பயன்பெறலாம் என வருவாய் துறையினர் தெரிவித்துள்ளனர்.