/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'குழந்தைகள் பெற்ற பலர் தனியாகத்தான் வசிக்கின்றனர்'
/
'குழந்தைகள் பெற்ற பலர் தனியாகத்தான் வசிக்கின்றனர்'
'குழந்தைகள் பெற்ற பலர் தனியாகத்தான் வசிக்கின்றனர்'
'குழந்தைகள் பெற்ற பலர் தனியாகத்தான் வசிக்கின்றனர்'
ADDED : செப் 28, 2025 05:40 AM

'ஒரு குழந்தை பிறந்தால் எல்லாம் சரியாக போகும்' என்ற பேச்சை எதிர்கொள்ளாத தம்பதிகள் யாரும் இருக்க வாய்ப்பில்லை.
பிள்ளை பேறு என்பது, தம்பதிகளுக்கும் அவர்களின் எதிர்காலத்திற்குமான நம்பிக்கை ... நான்கு பிள்ளைகளை பெற்ற முதியோர் எதிர்கொள்ளும் முதுமை சார்ந்த பிரச்னைகள் ஒரு புறம் என்றால், பல்வேறு காரணங்களால் பிள்ளை பேறு இல்லாத முதுமையான தம்பதிகள் எதிர்கொள்ளும் தனிமை, மன அழுத்தம் வேறு விதமானது என்கிறார், மனநல ஆலோசகர் பிரதீபா.
அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்டதாவது:
n குழந்தையில்லாமல் முதுமைக்குள் நுழைந்த தம்பதிகள் மனதில் தனிமை, ஏன் வாழ்கிறோம் என்ற எண்ணம், ஏக்கம், சோர்வு மனநிலை அதிகமாக காணப்படும். குறிப்பாக, நமக்கு ஒன்று என்றால் யார் பார்ப்பார்கள் என்ற எண்ணம், நம் காலத்திற்கு பிறகு நம் துணைக்கு யார் ஆதரவு என்ற பயம் இருவருக்கும் இருக்கும். அவர்கள் இதுவரை எதிர்கொண்ட, எதிர்கொள்ளப்போகும் சமுதாய அழுத்தங்களின் வெளிப்பாடுதான். இது தவிர்க்க முடியாத ஒன்று என்றாலும், அதை ஏற்று கடந்து செல்ல பழகிக்கொள்ள வேண்டும்.
n குழந்தை தத்தெடுப்பது என்பதை வயது, ஆரோக்கியம் இருக்கும் போதே முடிவு செய்து விட வேண்டும். 50 வயதில் தத்தெடுக்கின்றேன் என்ற பெயரில் தேவையற்ற சிரமங்களுக்குள் பலர் சிக்கிக்கொள்கின்றனர். 50 வயதில் தத்தெடுக்க நினைத்தால் வளர்ந்த குழந்தைகளை, சட்ட விதிமுறைகளின் அடிப்படையில் தேர்வு செய்யலாம்.
n உறவுகளுக்குள் தத்தெடுத்துவிட்டு, பலர் எங்கு அவர்கள் கேட்டுவிடுவார்களோ, வளர்ந்து உண்மை தெரிந்தால் பிரிந்து விடுவானோ என இருப்பதும் மன அழுத்தம் தான். நடைமுறை சூழல்களை புரிந்து தத்தெடுக்கும் முடிவுகளை எடுக்க வேண்டும்.
n உண்மையில் குழந்தை என்பது அவசியம் தான்; ஆனால், குழந்தை தான் வாழ்க்கை என்பது இல்லை. தத்தெடுக்காமல் இருக்கும் காலத்தை மகிழ்ச்சியாக கழித்து விடைகொடுக்க, தயாராக இருக்க வேண்டும்.
n இதுபோன்ற சூழலில் உள்ள தம்பதிகள் செல்லபிராணிகளை வளர்ப்பதால், தனிமையை சற்று கடந்து வர முடியும். ஆன்மிகம், புத்தகம் வாசிப்பு, ஓவியம், பொழுதுபோக்கு பழக்கங்களை வளர்த்துக்கொள்ளலாம்.
n உறவினர்கள் வீடுகளுக்கு சென்று வருதல், உறவினர்களின் குழந்தைகளை விடுமுறையில் வீட்டுக்கு அழைத்து வந்து, மனதார சமைத்து போடுதல் என நாட்களை அழகாக நகர்த்த முயற்சிக்கலாம். இதில், ஏக்கம் என்பது இருக்கும்; தவிர்க்க முடியாது.
n சுற்றுலா செல்வதையும், ஆதரவற்ற குழந்தைகள் இல்லங்களுக்கு சென்று, அவர்களுடன் நேரம் செலவிடுவதையும் வழக்கமாக்கிக் கொள்ளலாம்.
n கட்டாயம் ஆரோக்கியத்தை பராமரிப்பதும், ஆண்டுக்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனை செய்து கொள்வதும் அவசியம்.
n ஒருவர் மற்றொருவரை முழுமையாக சார்ந்து இல்லாமல், அனைத்து வேலைகளையும் பகிர்ந்து செய்யுங்கள்.
n முதுமை வயதுள்ள பெண்கள் வெளியிடங்களுக்கு செல்வது, வங்கிக்கு செல்வது போன்ற வேலைகளையும், ஆண்கள் சமையல் வேலைகளை செய்வதையும் பழகுவது அவசியம்.
n குழந்தைகள் உள்ள பல பெற்றோர், ஆதரவின்றி தனிமையில் தான் உள்ளனர். முதுமையில் தனிமை, சோர்வு, ஏக்கம் என்பது அனைவருக்கும் பொதுவானது. குழந்தை இல்லாததால் தான் தனிமை என்ற நினைப்பை அகற்றி, புத்துணர்ச்சியுடன் பயணப்படுங்கள்.
* உண்மையில் குழந்தை என்பது அவசியம் தான்; ஆனால், குழந்தை தான் வாழ்க்கை என்பது இல்லை. தத்தெடுக்காமல் இருக்கும் காலத்தை மகிழ்ச்சியாக கழித்து விடைகொடுக்க, தயாராக இருக்க வேண்டும்.
* குழந்தை தத்தெடுப்பது என்பதை வயது, ஆரோக்கியம் இருக்கும் போதே முடிவு செய்து விட வேண்டும். 50 வயதில் தத்தெடுக்கின்றேன் என்ற பெயரில் தேவையற்ற சிரமங்களுக்குள் பலர் சிக்கிக்கொள்கின்றனர்.