/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'நோ பார்க்கிங்'கில் நிறைய வாகனங்கள் போக்குவரத்து போலீசார் அலட்சியம்
/
'நோ பார்க்கிங்'கில் நிறைய வாகனங்கள் போக்குவரத்து போலீசார் அலட்சியம்
'நோ பார்க்கிங்'கில் நிறைய வாகனங்கள் போக்குவரத்து போலீசார் அலட்சியம்
'நோ பார்க்கிங்'கில் நிறைய வாகனங்கள் போக்குவரத்து போலீசார் அலட்சியம்
ADDED : டிச 06, 2025 06:02 AM

கோவை: கோவை நகர் பகுதியில் 'நோ பார்க்கிங்' என போலீசாரால் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ள இடங்களிலும் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. போலீசார் கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர்.
பிரதான சாலைகளில், வர்த்தக நிறுவனங்களுக்கு முன் இருபுறமும் நிறுத்தப்படுவதால், சாலையின் அகலம் குறைகிறது. குறுகிய இடங்களில் மற்ற வாகனங்கள் ஊர்ந்து செல்ல வேண்டியிருக்கிறது. இப்பிரச்னைக்கு தீர்வு காண, வாகனம் நிறுத்தும் இடங்களை முறைப்படுத்த வேண்டியுள்ளது.
சில முக்கியமான இடங்களில், ரோட்டின் ஒருபுறம் மட்டும் வாகனங்கள் நிறுத்தும் வகையில் போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுத்திருக்கின்றனர். சில இடங்களில் வாகனங்கள் நிறுத்தக் கூடாதென்பதற்காக, 'நோ பார்க்கிங்' அறிவிப்பு பலகை வைத்திருக்கின்றனர்.
அதை அலட்சியப்படுத்தும் வாகன ஓட்டிகள், அவ்விடத்துக்கு அருகிலேயே வாகனங்களை வரிசையாக நிறுத்துகின்றனர்.
ஆர்.எஸ்.புரம் டி.பி.ரோட்டிலும், ராமநாதபுரம் சந்திப்பிலும் இதேபோல் வாகனங்கள் நிறுத்துவது தொடர்கதையாக நடக்கிறது. டி.பி.ரோட்டில், 'நோ பார்க்கிங்' பலகைக்கு கீழ்ப்பகுதியில் வரிசையாக கார்கள் அணிவகுத்து நிறுத்தப்படுகின்றன. ராமநாதபுரம் சந்திப்பில் இருந்து சுங்கம் நோக்கி வரும் வழித்தடத்தில் ஒரே இடத்தில், மூன்று 'நோ பார்க்கிங்' பலகை வைக்கப்பட்டு இருக்கிறது.
அதன் கீழேயே இரு சக்கர வாகனங்கள், கார்கள் வரிசையாக நிறுத்தப்பட்டு இருக்கின்றன. போலீசார் வேடிக்கை பார்க்கின்றனர். வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க வேண்டும் அல்லது 'நோ பார்க்கிங்' பலகையை அகற்ற வேண்டும்.

