/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'பாரதியின் கவிதை வாரிசுகளாக பெண்கள் பலர் வர வேண்டும்'
/
'பாரதியின் கவிதை வாரிசுகளாக பெண்கள் பலர் வர வேண்டும்'
'பாரதியின் கவிதை வாரிசுகளாக பெண்கள் பலர் வர வேண்டும்'
'பாரதியின் கவிதை வாரிசுகளாக பெண்கள் பலர் வர வேண்டும்'
ADDED : மே 13, 2025 01:01 AM
கோவை, ; கோவையில் வசந்தவாசல் கவிமன்றம் சார்பில், இலக்கிய சந்திப்பு கூட்டம் நடந்தது.
இதில் கவிஞர் அகிலமணி ஸ்ரீவித்யா எழுதிய, 'பெண்ணெனும் மகாசக்தி' என்ற கவிதை நுால் வெளியிடப்பட்டது. நுாலை, பாரதியார் பல்கலை தமிழ்த்துறை தலைவர் சித்ரா வெளியிட்டு பேசியதாவது:
அன்னையர் தினத்தன்று, 'பெண்ணெனும் மகாசக்தி' என்ற இந்த நுாலை வெளியிடுவது சிறப்பாக உள்ளது.
இந்த கவிதை நுால், பெண் ஒரு மகாசக்தி என்பதை நிரூபிக்கும் வகையில் பொருள் பட பல நல்ல கவிதைகளை எழுதி இருக்கிறார். பாரதியின் கவிதை வாரிசுகளாக, இன்னும் பல பெண்கள் வரவேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
கவிஞர்கள் சுந்தரராமன், நா.கி.பிரசாத், சண்முகம், திலியோகராஜ் ஆகியோர் நுால் குறித்து கருத்துரை வழங்கினர்.