sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் மாவோயிஸ்ட்கள் நடமாட்டம்.. கண்காணிப்பு தீவிரம்!

/

மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் மாவோயிஸ்ட்கள் நடமாட்டம்.. கண்காணிப்பு தீவிரம்!

மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் மாவோயிஸ்ட்கள் நடமாட்டம்.. கண்காணிப்பு தீவிரம்!

மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் மாவோயிஸ்ட்கள் நடமாட்டம்.. கண்காணிப்பு தீவிரம்!


ADDED : பிப் 11, 2025 11:49 PM

Google News

ADDED : பிப் 11, 2025 11:49 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் நக்சல் தடுப்பு பிரிவு, சிறப்பு இலக்கு படை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மாவோயிஸ்ட், வேட்டை கும்பல்கள் நுழையாமல் இருக்க கிடுக்குப்பிடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பழங்குடியினரிடம் விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படுகிறது.

குன்னுார், கோத்தகிரி வனப்பகுதிகளுக்கு அருகில் அமைந்துள்ளது, மேட்டுப்பாளையம் வனச்சரகம். இந்த வனச்சரகம், 9,780 எக்டேர் பரப்பளவு கொண்டது. நீலகிரி மாவட்ட எல்லையை ஒட்டி அமைந்துள்ள கேரள மாநிலத்தின் வயநாடு, மலப்புரம் மாவட்ட வனப்பகுதிகளில் மாவோயிஸ்ட் நடமாட்டம் உள்ளது.

இவர்கள், நீலகிரி மாவட்டத்தில் நுழைவதை தடுக்கவும், நீலகிரி மாவட்டம் வழியாக மேட்டுப்பாளையம் வந்து காரமடை வழியாக கேரள செல்வதை தடுக்கவும், கர்நாடகா, கேரள மாநிலங்களில் இருந்து இவர்களுக்கு ஆயுதங்கள், போதை பொருட்கள் கிடைப்பதை தடுக்கவும், நீலகிரி, கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு சிறப்பு அதிரடி படை, சத்தியமங்கலம் சிறப்பு இலக்கு படை, நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் வனப்பகுதிகளில் சிறப்பு ரோந்து செல்கின்றனர்.

மேட்டுப்பாளையம் வனப்பகுதியில், கோவை மாவட்ட நக்சல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் ஆனந்த வேல் தலைமையில், அப்பிரிவு போலீசார் மற்றும் சத்தியமங்கலம் சிறப்பு இலக்கு படையினரும் இணைந்து வனப்பகுதியில் உள்ள அடர் வனப்பகுதிக்குள் துப்பாக்கிகளுடன் சென்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து, நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் கூறியதாவது:-

மேட்டுப்பாளையம் வனப்பகுதிக்குட்பட்ட ஜக்கனாரி, கல்லாறு, நெல்லி மலை, சுண்டப்பட்டி பிரிவு, கண்டியூர், குஞ்சப்பனை ஆகிய அடர்ந்த வனப்பகுதிகளில் 10 முதல் 15 கி.மீ., வரை துப்பாக்கிகளுடன் உள்ளே சென்று மாவோயிஸ்ட் நடமாட்டம், அந்நியர்கள் நடமாட்டம், வேட்டை கும்பல்கள், சந்தன மரம் வெட்டும் கும்பல்கள் நடமாட்டம் உள்ளதா என தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறோம். மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் மாவோயிஸ்ட் நடமாட்டம் எதுவும் இல்லை இருப்பினும் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளோம்.

அதே போல் கஞ்சா பயிர் செய்யப்பட்டுள்ளதா என ஆய்வு செய்கிறோம். மலைக்கிராமங்களில் புதிய நபர்களின் வருகை தொடர்பாக விவரங்களை சேகரிக்கிறோம். அப்பகுதி மக்களுக்கு நக்சலைட் தொடர்பாக விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படுகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேட்டுப்பாளையம் வனச்சரகர் ஜோசப் ஸ்டாலின் கூறுகையில், ''மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் மாவோயிஸ்ட் நடமாட்டம் இல்லை. கேரள எல்லையையொட்டி கீழ் செங்கலுார், கீழ் பில்லுார் உள்ளிட்ட மலைக்கிராம மக்களிடம் இது தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். மேலும், மக்களின் தேவைகளை அறிந்து அது தொடர்பான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம்,'' என்றார்.---






      Dinamalar
      Follow us