/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வரைபடம் இணைப்பதில்லை ; நில அளவைத் துறை மீது புகார்
/
வரைபடம் இணைப்பதில்லை ; நில அளவைத் துறை மீது புகார்
வரைபடம் இணைப்பதில்லை ; நில அளவைத் துறை மீது புகார்
வரைபடம் இணைப்பதில்லை ; நில அளவைத் துறை மீது புகார்
ADDED : ஜூன் 26, 2025 11:07 PM
அன்னுார்; 'உட்பிரிவு செய்யப்பட்ட இடங்களுக்கு வரைபடம் இணைப்பதில்லை,' என நில அளவை துறை மீது புகார் எழுந்துள்ளது.
அன்னுார் வட்டாரத்தில், மில்கள் மற்றும் தொழிற்சாலைகளால், குடியிருப்புகள் அதிகரித்துள்ளன. இங்கு வீடு மற்றும் மனையிடங்களுக்கு, வங்கி கடன் பெறுதல், அங்கீகாரம் பெறுதல் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக உட்பிரிவு செய்ய வேண்டி உள்ளது. இதற்காக அன்னுார் தாலுகா அலுவலகத்தில் உள்ள நில அளவை பிரிவில், உரிய கட்டணம் செலுத்தி, ஆவணங்களை சமர்ப்பித்தாலும், உட்பிரிவு செய்த பின் வரைபடம் இணைக்கப்படுவதில்லை என புகார் எழுந்துள்ளது.
இது குறித்து அ.மேட்டுப்பாளையம் கிராம மக்கள் கூறுகையில், 'அரசு இலவசமாக வழங்கிய எச்.எஸ். டி. பட்டா மற்றும் இதர பட்டாக்களை உட்பிரிவு செய்யும்போது அந்த உத்தரவுடன் வரைபடம் இணைத்து தருவதில்லை. இதுகுறித்து நில அளவைத் துறையில் கேட்டாலும் நடவடிக்கை இல்லை. இதனால் வங்கிக் கடன் பெறுவது, அங்கீகாரம் பெறுவது ஆகியவற்றில் சிரமம் ஏற்படுகிறது.
எனவே, மாவட்ட நிர்வாகம், அன்னுார் தாலுகா நில அளவைத் துறையில் உரிய கட்டணம் செலுத்தி உட்பிரிவு செய்யப்படும் மனைகளுக்கு வரைபடம் இணைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.