/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புற்றுநோயாளிகளுக்கு நிதி திரட்ட நாளை நடக்கிறது மராத்தான்
/
புற்றுநோயாளிகளுக்கு நிதி திரட்ட நாளை நடக்கிறது மராத்தான்
புற்றுநோயாளிகளுக்கு நிதி திரட்ட நாளை நடக்கிறது மராத்தான்
புற்றுநோயாளிகளுக்கு நிதி திரட்ட நாளை நடக்கிறது மராத்தான்
ADDED : நவ 22, 2025 05:30 AM
பொள்ளாச்சி: பொள்ளாச்சியில், புற்றுநோயாளிகளுக்கு நிதி திரட்டுவதற்காக, மராத்தான் போட்டி நாளை நடக்கிறது.
பொள்ளாச்சி என்.ஐ.ஏ. கல்வி நிறுவனங்கள், மிராக்கிள் இன்டக்கிரேடெட் ெஹல்த் சென்டர், கோவை தடகள சங்கம் சார்பில், கணைய புற்றுநோய் விழிப்புணர்வு தினத்தையொட்டி மராத்தான் போட்டி நாளை, 23ம் தேதி நடக்கிறது. இதற்காக பங்கேற்பு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இது குறித்து, சக்தி குழுமங்களின் தலைவர் மாணிக்கம் கூறியதாவது:
புற்றுநோயாளிகளுக்கான நிவாரண நிதி சேகரிப்பு முயற்சியாக மராத்தான் போட்டி நடைபெறுகிறது. சமூக ஒற்றுமை, உத்வேகம், மனித நேயத்தை உயர்த்தும் விதமாக இந்த நிகழ்ச்சி திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த மராத்தான் ஓட்டத்தில், 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்களும், பெண்கள், 10 கி.மீ. பிரிவிலும்; 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமியர், 5 கி.மீ. பிரிவிலும்; 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், இரண்டு கி.மீ. பிரிவிலும் பங்கேற்க முடியும்.
45 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள், பெண்களுக்கு, 'வெட்ரான்' கேட்டகரியும் அமைக்கப்பட்டுள்ளது. கல்லுாரி வளாகத்தில் போட்டிகள் துவங்குகிறது.
பொதுமக்களுக்கு ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, புற்றுநோயால் போராடும் நோயாளிகளுக்கு நிதி உதவி அளிக்கும் முயற்சியாக நடத்தப்படுகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.

