/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கல்லுாரியில் சிறுதானிய உணவகம் திறப்பு
/
கல்லுாரியில் சிறுதானிய உணவகம் திறப்பு
ADDED : நவ 22, 2025 05:29 AM

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அரசு கலை கல்லுாரியில் சிவசக்தி மகளிர் சுய உதவிக்குழுவினர் சார்பில், சிறுதானிய உணவகம் துவங்கப்பட்டது.
பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம் ஆச்சிப்பட்டி ஊராட்சி அளவிலான கூட்டமைப்பின் கீழ் செயல்படும் சிவசக்தி மகளிர் சுய உதவிக்குழுவினரின், மதி சிறுதானிய உணவகம், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் துவங்கப்பட்டது.
கல்லுாரி முதல்வர் (பொ) செந்தில்நாயகி, மகளிர் சுய உதவிக்குழுக்கள், மாவட்ட வழங்கல் மற்றும் சந்தைப்படுத்தல் சங்க மேலாளர் நித்யா, வட்டார இயக்க மேலாளர் வேல்முருகன் பங்கேற்றனர். மாணவ, மாணவியருக்கு சிறுதானிய உணவுகளை வழங்கும் வகையில் இந்த உணவகம் திறக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஊட்டச்சத்து மிக்க சிறுதானிய கலவை சாதம், ராகி கூழ், கம்பங்கூழ் மற்றும் சூப் வகைகள், சிறு தானிய தின்பண்டங்கள் விற்பனை செய்யப்படுகிறது.

