UPDATED : மே 08, 2026 03:44 PM
ADDED : மே 08, 2026 03:40 PM
அ நிறம் | அளவு
கோவை: தமிழ்நாடு மின் பகிர்மான கழகம், குனியமுத்துார் கோட்டம், மதுக்கரை பிரிவு அலுவலகத்துக்குட்பட்ட பகுதிகளில் தவிர்க்க இயலாத நிர்வாக காரணங்களால், இம்மாதத்துக்கான மின் கணக்கீடு மேற்கொள்ளப்படவில்லை.
இதனால் காளியாபுரம், ரொட்டிக்கவுண்டனுார், மயிலம்பாறை, ஆண்டவர் நகர் மற்றும் தோட்டப்பகுதிகள், பிச்சனுார் மற்றும் வீரப்பனுார் பகுதிகளை சேர்ந்த மின் நுகர்வோர், மார்ச் மாதம் செலுத்திய மின் கட்டணத்தையே மே மாதத்துக்கும் செலுத்தலாம்.
இத்தகவலை, குனியமுத்துார் செயற்பொறியாளர் (பொறுப்பு) சென்ராம் தெரிவித்துள்ளார்.
