தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/மாரியம்மன் கோவில் தேரோட்டம் நிறைவு

மாரியம்மன் கோவில் தேரோட்டம் நிறைவு

மாரியம்மன் கோவில் தேரோட்டம் நிறைவு


ADDED : மார் 09, 2024 07:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 09, 2024 07:41 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பொள்ளாச்சி : பொள்ளாச்சியில், பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா, கடந்த மாதம் 13ம் தேதி நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது. கம்பம் நடுதல் மற்றும், பூவோடு வைத்தல் நிகழ்ச்சி நடந்தது.

கடந்த,6ம் தேதி வெள்ளி தேரோட்டம் துவங்கியது. 12 அடி உயரம் உள்ள மரத்தேரில் விநாயகரும், 21 அடி உயரம் உள்ள வெள்ளித்தேரில் மாரியம்மனும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

கோவிலில் இருந்து மார்க்கெட் வீதி வழியாக வந்து வெங்கட்ரமணன் வீதியில் நிலை நிறுத்தப்பட்ட தேர், நேற்றுமுன்தினம் இரவு, வெங்கட்ரமணன் வீதி, உடுமலை ரோடு வழியாக சென்று சத்திரம் வீதியில் நிலை நிறுத்தப்பட்டது.

அங்கு, பக்தர்கள் தேரின் சக்கரத்தில் உப்பு கொட்டி வழிபாடு செய்தனர். தொடர்ந்து, சத்திரம் வீதி வழியாக தேர் புறப்பட்டு கோவிலடைந்து நிலை நிறுத்தப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us