/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாரியம்மன் கோவில் திருவிழா கொடியேற்றம்
/
மாரியம்மன் கோவில் திருவிழா கொடியேற்றம்
ADDED : ஜன 08, 2024 11:24 PM
வால்பாறை;வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதியில் ஆண்டு தோறும் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு பொங்கல் திருவிழா வரும், 15ம் தேதி துவங்கி தொடர்ந்து மூன்று நாட்கள் நடக்கிறது.
வால்பாறை அடுத்துள்ள ஈட்டியார் எஸ்டேட் மாரியம்மன் கோவிலின், 44ம் ஆண்டு திருவிழா, நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. வரும், 14ம் தேதி இரவு சக்தி அழைத்தல் நிகழ்ச்சியும், 15ம் தேதி காலை அம்மனுக்கு சிறப்பு அபிேஷக, அலங்கார பூஜையும் நடக்கிறது.
வரும், 16ம் தேதி காலை மாவிளக்கு எடுத்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடக்கிறது. மாலை, 3:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் எழுந்தருளி திருவீதி உலா சென்று அருள்பாலிக்கிறார். 17ம் தேதி அன்னதானம் வழங்கும் விழா நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.