/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'திருமணம் ஆனால் தான் ஆண் நிறை மனிதனாகிறார்'
/
'திருமணம் ஆனால் தான் ஆண் நிறை மனிதனாகிறார்'
ADDED : பிப் 12, 2025 11:27 PM

மேட்டுப்பாளையம்; திருமணம் ஆன பின் தான், ஒரு ஆண் நிறை மனிதனாக ஆகிறார், என, ஆன்மீக சொற்பொழிவாளர் தத்தாத்ரேயன் பேசினார்.
காரமடை அரங்கநாதர் கோவிலில், எஸ்.வி.டி., பசுமை அறக்கட்டளை, ஒவ்வொரு வாரம் சனிக்கிழமை பக்தி சொற்பொழிவை நடத்தி வருகிறது. 377வது வாரத்தை முன்னிட்டு, கம்பராமாயண தொடர் சொற்பொழிவை துவக்கியது. ஒன்பது வாரம், ஒவ்வொரு சனிக்கிழமையும் இந்த கம்பராமாயண தொடர் சொற்பொழிவு நடைபெற உள்ளது. மாலை,7:00 லிருந்து, 8:00 மணி வரை கோவை ராமகிருஷ்ண மிஷன் வித்யாலய ஆசிரியரும், ஆன்மீக சொற்பொழிவாளருமான தத்தாத்ரேயன், ஆன்மீக உரையை நிகழ்த்த உள்ளார்.
துவக்க நாளில் 'ராம ஜனனம்' என்ற தலைப்பில், தத்தாத்ரேயன் பேசுகையில்,திருமணம் ஆன பின் தான், ஒரு ஆண் நிறை மனிதனாக ஆகிறார். திருமணம் ஆகாதவரை, அவர் செல்வன். திருமணம் ஆன பின் ஆணின் பெயருக்கு முன் 'திரு' என பெயர் பெறுகிறார். மனைவியால் கணவனுக்கு பெருமை கிடைக்கிறது, என்றார்.
நிகழ்ச்சிக்கு அறக்கட்டளை நிர்வாகி ராஜேந்திரன் தலைமை வகித்தார். நிர்வாகி அமரகவி வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். எஸ்.வி.டி., பசுமை அறக்கட்டளை நிறுவனர் சக்திவேல் நன்றி கூறினார். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
வருகிற, 15ம் தேதி சீதாராமர் கல்யாணம், 22ம் தேதி ராமர் வனமேகுதல், மார்ச் 1ம் தேதி ஸ்ரீ பாதுகா பட்டாபிஷேகம், எட்டாம் தேதி ஆரண்யத்தில் ஸ்ரீராமன், 15ம் தேதி ஸ்ரீராமனும், சுக்ரீவனும், 22ம் தேதி சுந்தர காண்டம், 29ம் தேதி ராவண வதம், ஏப்ரல்,5ம் தேதி சீதா ராமர் பட்டாபிஷேகம் ஆகிய தலைப்புகளில், இவர் சொற்பொழிவு ஆற்ற உள்ளார்.
இதற்கான ஏற்பாடுகளை பசுமை அறக்கட்டளை நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

